இரவில் நன்றாக தூக்கம் வர என்ன செய்ய வேண்டும் !!!!!
வணக்கம் ஒருவருக்கு தூக்கம் மிகவும் இன்றியமையாதது தூக்கத்தின் மூலம் தான் நாள் முழுவதும் ஓய்வின்றி வேலை செய்யும் உடலுக்கு போதிய ஓய்வு கிடைக்குது . தூக்கம் சரியான அளவில் இருக்கும் பொழுது உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் மன அழுத்தமுள்ள வாழ்க்கை முறை தொழிநுட்பம், வேலைப்பளு இதனால நிறைய பேருக்கு தூக்கம் இருக்கிறதில்லை.
தூக்கம் வராம இருக்குறதால மறுநாள் காலையில அவங்களால கண் விழிக்க முடியாது. உடல்சோர்வு ஏற்படும் அதனால மறுநாள் வேலையும் கெட்டுப்போகும் இந்த மாதிரி தொடர்ந்து நடந்தால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நல்லதும் கிடைக்காமல் போக வாய்ப்பிருக்கு.
இப்படித் தூங்காமல் இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தியும் பலவீனமடையும் சர்க்கரை நோய், இதய நோய் அபாயம் அதிகரிக்கும் அதனால தூக்கமின்மையில் இருந்து விடுபட தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொள்ளாமல் ஒரு சில எளிய இயற்கை வழிகள் மூலம் தூக்கத்தைப் பெறலாம்.
நைட்ல தூக்கம் வருவதை தவிர்க்கும் வழிமுறைகள்
ஒரு குறிப்பிட்ட நேரம் வரை டிவி, மொபைல் யூஸ் பண்றது அப்படிங்கிற பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். இது தூக்கத்தையும் கண்களையும் பாதிக்கும் அப்படிங்கறது நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நைட் தூங்க வந்ததுக்கு அப்புறம் அடுத்த நாள் செய்யப்போற வேலைத்திட்டங்கள், பிரச்சினைகள் இது பற்றி யோசிக்கக் கூடாது. அது போல இரவுல சீக்கிரம் தூங்க போகணும் . மாலை 4 மணிக்கு மேல் டீ ,காபி குடிப்பதை தவிர்க்கவும்.
மதுப்பழக்கம் தூக்கத்தை கெடுப்பதுடன் உடல் நலத்தையும் கெடுக்கும். மது அருந்தினால் தான் தூக்கம் வருகிறது என்பது சிலருடைய எண்ணம் அது தவறு. இயற்கையாக வருகிற தூக்கம் தான் மிகவும் நல்லது. மது அருந்துவதால் வருகிற செயற்கையான தூக்கம் மிகவும் ஆபத்தானது .
தூங்கப்போறதுக்கு முன்னாடி உடற்பயிற்சி செய்யக்கூடாது காலை அல்லது மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்யலாம். ஏரோபிக் உடற்பயிற்சி தினமும் செய்யும் பொழுது நிம்மதியான தூக்கம் வரலாம். நாம யூஸ் பண்ற தலையணை நல்லா சாப்டா இருக்கிற மாதிரி பார்த்துக்கணும். படுக்குற இடத்தில் வெளிச்சம் மட்டும் சத்தம் இல்லாம இருந்தா நல்ல தூக்கம் வரும். நைட்ல சாப்பிடற சாப்பாடு காரம் மற்றும் புளிப்பு கொண்ட உணவுகள் இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
தூங்கப்போறதுக்கு மூன்று மணி நேரத்துக்கு முன்னாடி சாப்பிட்டு இருக்கணும். அடுத்தது டெய்லி தியானப் பயிற்சி செய்யலாம் இதனால் மனம் சாந்தமடையும் நைட்டு நல்லா தூக்கம் வரும். இதனால மனநலமும் உடல்நலமும் ஆரோக்கியமாக இருக்கும். யோகாவில் மூச்சுப் பயிற்சிகளை செய்து வந்தால் உடல் மற்றும் நரம்பு மண்டலத்தை சாந்தப்படுத்தி நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.
நல்லா தூக்கம் வருவதற்கு ஒரு சில பாட்டி வைத்திய முறையைப் பார்க்கலாம்
1. இரவில் தூங்கப்போறதுக்கு முன்னாடி பாலில் கசகசா சேர்த்து பால் குடிக்கிறது ரொம்பவும் நல்லது. பாலில் உள்ள ட்ரிப்டோபன் என்ற அமினோ அமிலம் நல்ல தூக்கத்தை வரவைக்கும். இது மூளை நரம்பியல் மண்டலத்தில் உள்ள செரட்டோனினை தூண்டி மெலடோனின் என்ற ஹார்மோன் சுரக்க செய்யும். இயற்கையாகவே நமக்கு இந்த ஹார்மோன் சுரக்க ஆரம்பிச்சுடா நல்ல தூக்கம் வந்துரும். கசகசா பால் குடிக்கிறதாதாள தூக்கம் வராதவங்களுக்கும் தூக்கம் வரும்.
2.வெண் தாமரையுடன் மஞ்சள் தூள் சேர்த்து கஷாயம் காய்ச்சி குடித்தால் நல்ல தூக்கம் வரும்.
3. ரோஜாப்பூ, வெள்ளை மிளகு, சுக்கு இம்மூன்றையும் 50 50 கிராம் எடுத்து அரைத்து காலை மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டால் தூக்கமின்மை பிரச்சினை சரியாகும்.
4. வாழைப்பழம் இயற்கையாகவே இரவில் நல்ல தூக்கத்தை தரும். வயதானவர்களுக்கு அதிக ரத்த அழுத்தத்தால் தூக்கம் வராமல் இருக்கும். அப்பொழுது வாழைப்பழம் சாப்பிட்டால் எளிதில் தூக்கம் வரும்.
5.வாதுமைப்பருப்புல மெலடோனின் மற்றும் செரடோனின் என்ற இரண்டு பொருட்கள் இருக்கு இது ரெண்டுமே உங்களுக்கு நல்ல தூக்கத்தை தரும்.
6.சிறிதளவு சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து அதோட கொஞ்சம் தேன் சேர்த்து குடித்தால் தூக்கம் பிரச்சனை தீரும்.
7.சாப்பாட்டில் தயிர் சேர்த்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்
8.வேப்பிலை எடுத்து மிதமான சூட்டில் வதக்கி தலைக்கு அடியில் வைத்து தூங்கினால் நல்ல தூக்கம் வரும்.
9.மீன் முட்டை நகைகள் சாப்பிடும்பொழுது நல்ல தூக்கம் வரும்
10.அதே போல எளிதில் செரிக்கக் கூடிய காய்கறிகள் சாப்பிடும் பொழுது நல்ல தூக்கம் வரும். கண்களை மூடி நினைவைப் புருவ மத்தியில் கொண்டு வரும்பொழுது கொஞ்ச நேரத்துலயே தூக்கம் வந்துரும்.
உங்களுக்கு இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற நமது பக்கத்தை பின் தொடருங்கள் .
Comments
Post a Comment