நாம் தினமும் உபயோகப்படுத்தும் சிம் கார்டை பற்றி தெரிந்து கொள்வோம் ???.


இன்றைய இணைய உலகில் கைபேசி பயன்படுத்தாத மனிதர்களை காண்பது அரிது. அப்படிப்பட்ட கைப்பேசிக்கு உயிராக செயல்படும் சிம் கார்டு பற்றி நாம் அறிந்து கொள்வது அவசியம்.

முதன்முதலாக சிம் கார்டின் அளவு நாம் இன்று உபயோகப்படுத்தும் ஏடிஎம் கார்டில் அளவைப் போன்று மிகவும் பெரியதாகக் காணப்பட்டது. பின்னர் தொழில்நுட்ப வளர்ச்சியின் மாற்றத்தால் இன்று நாம் உபயோகப்படுத்தும் நானோ சிப் போன்ற சிறிய அளவிலான சிம் கார்டு கிடைக்கிறது.

நாம் புதியதாக வாங்கும் ஒவ்வொரு சிம்கார்டிலும் IMSI எனப்படும் International Mobile Subscriber Identify எனும் எண்ணும் மற்றும் Activation Key  எனப்படும் எண்ணும் இருக்கும். நமது கைபேசியில் புதிய சிம்கார்டை பொருத்திய உடன் அருகிலுள்ள டவருக்கு நமது சிம் கார்டில் இருந்து IMSI எண்ணும் மற்றும் Activation Key எண்ணும் சிக்னலாக அனுப்பப்படும். மறுமுனையிலிருந்து நமது சிம் கார்டுக்கு Encryption Message ஒன்று அனுப்பப்படும். இந்த மெசேஜை நமது சிம் கார்டு Authentication Key மூலம் பெற்று நமது சிம் கார்டுக்கு நெட்வொர்க் இணைப்பை ஏற்படுத்தும். பிறகு நமது கைபேசியில் சிம் கார்டு Activate ஆகிவிடும்.

மேலும் நமது பெயரில் எத்தனை சிம் கார்டு உள்ளது மற்றும் வேறு ஏதேனும் சிம் கார்டு உள்ளதா என்பதை கண்டறிய கீழ்க்காணும் இணையதளத்திற்கு சென்று உங்களது கைபேசி எண்ணை உள்ளிடவும். உங்களுக்கு OTP குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அதனை மீண்டும் உள்ளீடு செய்து செய்தவுடன் உங்கள் உங்கள் பெயரில் உள்ள அனைத்து தொலைபேசி எண்களும் திரையில் தெரியும். அதில் உங்களுக்கு சம்பந்தமில்லாத எண் எதுவும் இருந்தால் Report என்ற ஆப்ஷனை அழுத்தி Report செய்து கொள்ளவும். உங்களது Report க்கு ஒரு வார காலத்திற்குள் பதில் அனுப்பப்படும். மேலும் உங்கள் Report ன் நிலையை உங்கள் கைபேசி எண்ணை உள்ளீடு செய்து அறிந்து கொள்ளவும் முடியும்.

இணையதளம் :

https://tafcop.dgtelecom.gov.in/

Comments

Popular posts from this blog

அழகர் மலை பதினெட்டம்பபடி கருப்பண்ணசாமி கோவில் வரலாறு