அழகர் மலை பதினெட்டம்பபடி கருப்பண்ணசாமி கோவில் வரலாறு

 அழகர் மலை பதினெட்டம்படி கருப்பண்ணசாமி கோவில்  வரலாறு  !!!!.

108 திவ்ய ஸ்தலங்களில் ஒன்று சிலப்பதிகாரத்தில் அழகர் கோவிலைப் பற்றி திருமாலிருஞ்சோலை பற்றி நமக்கு செய்திகள் வருகின்றன. மாடல மறையோன் சொல்லுகிறபோது மதுரை உடைய  வழியை சொல்லுகிறபோது சிலப்பதிகாரத்தில் அந்த அழகர் மலையை பற்றி சொல்கிறார். பரிபாடல் பற்றி சொல்கிறது எத்தனையோ அழகரந்தாதி, அழகர் கலம்பகம், கிள்ளைவிடு தூது ஆகிய நூல்கள் கூறுகின்றது . இந்த பெருமை மிகுந்த திருமாலிருஞ்சோலை 108 திவ்ய ஸ்தலங்களில் ஒன்று என்பதனை  ஆழ்வார்கள் பாடி இருக்கிறார்கள் 

குறிப்பாக பெரியாழ்வாரும், ஆண்டாளும் தன்னுடைய நிறைவு காலத்தினை இங்கு தான் கழித்தார்கள் . நாச்சியார் திருமொழி எல்லாம் இந்த கோவிலை பற்றி கூறுகிறது.கோவிலுக்கு வெளியே  சன்னதி ஒன்று இருக்கிறது. அங்கு உருவமில்லை பெரிய கதவு அந்த கதவை திறந்தாள்   18 படிகள்  இருக்கும். ஒரு ஆள் உயரத்துக்கு மேல் ஒரு அருவாள் இருக்கும். பெரிய பாதுகைகள் இருக்கும் அந்தக் கடவுளுக்குத்தான்  மாலை போட்டு இந்த பதினெட்டாம்படி கருப்பு என கும்பிடுகிறார்கள்.  

இந்த பதினெட்டாம்படி கருப்பு யார் அவர் ஏன் இங்கு வந்து இருக்கிறார் இதுக்கான வரலாறுதான் பார்க்கிறபோது அழகர்கோயில் என்ற தொ .பரமசிவம்  அவருடைய நூலில் இது பற்றிய செய்திகள் இருக்கு. இந்த வரலாறு ரொம்ப ஆச்சரியமான வரலாறு. திருமாலிருஞ்சோலையில்  இருக்க கூடிய பெருமாளுடைய அழகு அத்தனை அழகு.

இந்த அழகும் இந்த அருளும் பார்த்து மக்கள் அங்கு போவதை பார்த்து இருந்த ஒரு மன்னன் மலையாள தேசத்து மன்னன். இந்த சுவாமிகளுடைய முகத்துடன் கூடிய அருளை அந்தத் தன்மையை, கருணையை எப்படியாவது கொண்டு வந்துவிடனும்  அப்படின்னு அதுக்காக 18 மந்திரவாதிகளையும் ஒரு காவல் தெய்வத்தை அனுப்பினார். இது நமக்கு செவி வழி கதையாகத்தான்  நமக்கு சொல்லப்படுது.  18 மந்திரவாதிகள் வர்றாங்க கூட ஒரு காவல் தெய்வம்வருது   அந்த காவல் தெய்வம் கோவிலுக்கு வெளியே நின்றுவிடுகிறது . 

இந்த 18 மந்திரவாதிகள் என்ன பண்றாங்கன்னா யாகம் செய்து அதில் ஒரு மையை எடுத்து தலையில் தடவி கொள்கிறார்கள்.அந்த  மை தடவிய காரணத்தினால் அவர்கள் யருடைய கன்னிட்கும் தெரிய மாட்டார்கள் கோயிலுக்குள்ளே சுத்தி வராங்க. இரவு நடை சாத்திய பிறகு அருளை மந்திரத்தால் பெற்று விடலாம் என்று காத்திருக்கிறார்கள்.. 

அக்கோயில் உடைய அர்ச்சகருடைய  கனவில் பெருமாள் தோன்றி இப்படி ஒரு நிகழ்வு நிகழ இருக்கிறது எனவே அதற்கு மாற்று ஏற்பாடு செய்யுங்கள் என  சொல்லி அதாவது சாதத்தை கஞ்சியோடு வடித்து அதை அந்தக் கோயிலில் பல்வேறு இடங்களில் ஊற்றி வைக்க சொல்கிறார்கள். குறிப்பாக கருவறை உள்ளிட்ட  பல இடங்களில்  ஊற்றுகிறார்கள். அதிலிருந்து புறப்பட்ட அந்த சூடான ஆவியானது  அந்தக் கண்மை உருகிட உடனே அந்த 18 பேரோட  உருவம் வெளியே தெரிஞ்சது.  உடனே அங்கிருந்தவர்கள் என்ன பண்றாங்கன்னா இவர்கள் இருந்தால் தீமை செய்வார்கள் என சொல்லி அவர்களை உடனடியாக  கொன்று அவங்க மேல 18 படிக்கட்ட  கட்டிட்டாங்க.  

இப்ப இவர்களோடு வந்த காவல் தெய்வம் இருக்கு இந்த காவல் தெய்வம் அழகருடைய அந்த அழகையும் அங்கு வருகின்ற மக்களிடையே தன்மையும் பார்த்து மயங்கி என்னை நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம் நான் அழகுற அவருடைய வாசலில் காவல் காக்ககிறேன்.  எனக்கு வேண்டியதெல்லாம் வேறொன்றுமில்லை அழகருக்கு  போடுகின்ற மாலையையும்  அவருக்கு வருகின்ற உணவையும்  என கொடுத்தா போதும் நான் இங்கு காவல் காத்து நிற்பேன் அப்படின்னு அந்த சாமி சொன்னது . அப்படி காவலாக வந்து சாமி தான் இந்த பதினெட்டாம்படி கருப்பசாமி.

 மலையாள தேசத்திலிருந்து வந்த தெய்வம் அந்த தெய்வம். இத வருஷத்துல ஒரு நாள் தான் திறக்கிறார்கள். அதாவது நம்முடைய சக்கரத்தாழ்வார் அது வழியா புறப்பட்டு வருவதற்காக அந்த வழியே தெறக்குறாங்க. அந்த நாளில்தான் எல்லா ஏற்பாடுகள் நடக்கிறது. கோயில் சொத்துக்கள் பொறுப்புக்கள் எல்லாம் கருப்பு கையில்தான் கொடுக்கப்படுகிறது . சுவாமி அங்கிருந்து புறப்படும் போது அங்கிருந்து புறப்பட்டு அங்கு வந்து பார்த்துவிட்டு திரும்ப உள்ள போறாரு இன்னைக்கும் 18 கிராமத்தை சேர்ந்தவர்கள் ஏதேனும் ஒரு நியாயம் கிடைக்கவில்லை என்றால் கருப்பு கோவிலில்  சத்தியம் செய்  என்று சொல்லுகிறார் என்றால் அப்படி ஒரு நியாயக் கடவுளாக காவல் கடவுளாக எல்லோரும் காக்கும் கடவுளாக இருக்கின்ற பெருமை பதினெட்டாம் படியான் கொண்டிருக்கிறார் . 

இந்த 18 படிகள் என்று சாதாரணமாக இல்லை  18 ஆண்டுகள் 18 மாதம் ராமனுக்கும் ராவணனுக்கும் இடையே போர் நடந்தது, 18 நாள் மகாபாரதத்தில் கௌரவர்கள் பாண்டவர்கள் இடையே போர் நடந்தது, 18 மணி நேரம் சேரன் செங்குட்டுவன் 18 நாழிகைகளுக்குள் கனக விசயர்  தன்னை எதிர்த்த மன்னர்களை வீழ்த்தினான். 18 மணி நேரம் 18 நாள் 18 மாதம் 18 வருடம் என்று நாம் சொல்வது போல பதினெண் சித்தர்கள் அடங்கிய இடங்கள் எல்லாம் நமக்கு அருள் கிடைக்க வேண்டும். 

Comments