கழிவறையில் எது சிறந்தது ???
இன்றைய காலகட்டத்தில் கழிவறை என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களையும் வீட்டுக்கொரு கழிப்பறைத் கொடுக்க வேண்டும் என்ற திட்டத்தை செயல்படுத்திக் கொண்டு வருகிறது மத்திய அரசு. இரண்டு வகையான கழிப்பறைகள் இந்தியாவில் இருக்கிறது ஒன்று இந்திய கழிப்பறை மற்றொன்று வெஸ்டர்ன் கழிப்பறை.
வளர்ந்து வரும் நாகரீகத்தினால் மேலை நாட்டு கலாச்சாரத்தின் மீது காதல் கொண்டதால் வெஸ்டர்ன் கழிப்பறையை பலர் வந்து விரும்புறாங்க. இந்த நிலையில் பெரும்பாலான வீடுகளில் இந்திய பாணி கழிப்பறையை இன்னும் பலர் பயன்படுத்துகிறார்கள் . வெஸ்டர்ன் கழிப்பறை மிகவும் வசதியாக இருக்கும். ஆனால் எவ்வளவு வசதியாக இருக்கிறதோ அதே அளவுக்கு அதில் பல தீமைகளும் இருக்கு.
மேற்கத்திய பாணி கழிப்பறைகளை விட இந்திய பாணி கழிப்பறைகள் சிறந்தது என்பதற்கான காரணங்களை வந்து இந்த பதிவில் காணலாம். இந்திய கழிப்பறையில் குந்துதல் முறையில் மலம் கழிப்பதனால் இதன் மூலமாக ஒவ்வொரு நாளும் உங்களை உடற்பயிற்சி செய்யவைத்து இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் . நம்மில் பலர் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தாலும் அதை வந்து புறக்கணிப்பார்கள். இந்திய கழிப்பறையில் உட்காந்திருக்கும் விதம் உங்களோட ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் மற்றும் உங்கள் கால் , கைகளுக்கு ஒரு சிறந்த உடற்பயிற்சி என்று கூறப்படுகிறது. இது குடல் வயிறு போன்ற உடல் பாகங்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. இந்த முறை ஒரு ஆசனம் என்று கூட சொல்லப்படுகிறது .
அதுமட்டுமில்லாமல் செரிமானத்தை மேம்படுத்தும் குந்துதல் முறை உங்களோட வயிற்றை அழுத்துகிறது இது உங்களோட வயிற்றில் உள்ள உணவிட்கு அழுத்தம் வந்து கொடுப்பதன் மூலமும் செரிமானத்துக்கு உதவுகிறது .
மேற்கத்திய பாணியிலான கழிப்பறையில் உட்கார்ந்திருப்பது நம் வயிற்றில் எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாது. வெஸ்டன் டாய்லெட் மலச்சிக்கலையும் ஏற்படுத்தும். அதிக காகிதம் மேற்கத்திய கழிப்பறைகளில் பயன்படுத்துவதால் அதிகப்படியான காகிதத்தை வீணாக்க வழிவகுக்கிறது. இந்திய கழிப்பறைகளை காகிதம் உபயோகப்படுத்துவதில்லை. இந்திய கழிப்பறைகள் உடன் ஒப்பிடும்போது மேற்கத்திய கழிப்பறைகளில் அதிகமான நீர் தேவைப்படுதுகிறது .
மேற்கத்திய கழிப்பறைகளை விட இந்திய கழிப்பறைகள் மிகவும் சுகாதாரமானவை. பொது இடங்கள்ல இந்திய கழிப்பறைகளை பயன்படுத்துவது சவுகரியமானது. இந்திய கழிப்பறைகள் உங்கள் உடலுடன் நேரடித் தொடர்பு இல்லை ஆனால் வெஸ்டன் டாய்லெட் எல்லாம் உங்கள் உடலுடன் நேரடித் தொடர்பு இருக்கும் இதன் மூலம் சிறுநீர் பாதை நோய் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம் .
கர்ப்பிணி பெண்கள் இந்திய கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். கர்ப்பிணிப் பெண்கள் இந்திய கழிப்பறையில் அமர்ந்திருக்கும் போது கருப்பையில் எந்த அழுத்தமும் ஏற்படாது. இந்திய கழிப்பறையை தவறாமல் பயன்படுத்துவதால் கர்ப்பிணிப் பெண்கள் இயற்கையான பிரசவத்திற்கு தயாராக இருக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள் .
இந்திய கழிப்பறையில் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பு மிகவும் குறைவு. ஆனால் வெஸ்டர்ன் டாய்லெட்டில் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பு அதிகமாவே உள்ளது . நம்ம உடலில் உள்ள பெருங்குடலில் இருந்து மலத்தை முழுமையாக வெளியேற்ற ஸ்குவாட்டிங் உதவுது. இது மலச்சிக்கல், குடல் அலற்சி மற்றும் பெருங்குடல் புற்றுநோயை ஏற்படுத்தும் பிற காரணிகளை தடுக்குது.
இந்திய கழிப்பறைகளில் மிக முக்கியமான அம்சம் இதை குழந்தைகள் வந்து எளிதாக பயன்படுத்தலாம். இது மேற்பரப்புடன் இணைக்கப்பட்டு இருப்பதனால் குழந்தைகள் வயதை அடையும் வரை யாருடைய உதவி இல்லாமல் தானாகவே பயன் படுத்தலாம். ஆனால் வெஸ்டர்ன் கழிப்பறையில் குழந்தைகள் விழுந்துவிடும் அபாயம் இருக்கும் . நாம் இந்திய கழிப்பறை முறையே பயன்படுத்துவதனால் ஏற்படும் நன்மைகள் வந்து ஏராளமாக உள்ளது
Comments
Post a Comment