காலையில் நாம் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் !!!!!!!



தினமும் விடியற்காலையில் எழுந்துகிறது  என்பது ரொம்ப கஷ்டமான வேலையா இருக்கும். காலையில எந்திரிக்கும் போது வலது பக்கம் திரும்பி படுத்து அதுக்கப்புறம்தான் படுக்கையிலிருந்து  எந்திரிக்கணும். இதன் மூலமா அந்த நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும்  என ஆராய்ச்சியாளர்கள்  சொல்கிறார்கள்.

பொதுவாக காலையில் எழும் போது நம்மளோட தசைப்பிடிப்புகளை எடுத்து விடுவது  என்பது  ரொம்ப சாதாரணமான விஷயம் தான். அப்படி செய்யும் போது முதுகு பகுதியை கடினமாக செயல்படுத்தக்கூடாது மெதுவாக  முதுகு தசைப்பிடிப்புகளை நாளிலிருந்து அஞ்சு முறை கொஞ்சம் சுத்தி எடுத்து விடனும்.

அதோட நீண்ட மூச்சுப் பயிற்சியின் மூலம் அந்த நாளையே  நீட்சி அடைய செய்யலாம். காலையில எழுந்தவுடனே கொஞ்சம் தண்ணீர் குடிக்கிறது உடம்புக்கு ரொம்ப நல்லது. உடம்பில் உள்ள நச்சுக்களை எல்லாத்தையுமே அது வெளியே தள்ளி விடும். அதோட காபி,டீ  இதெல்லாம் குடிக்கிறது உடம்புக்கு ரொம்ப கெடுதலான விஷயம். அது மட்டுமில்லாமல் இந்த  வகையான அசிட்டிக் வகைகளை தவிர்த்து நம்ம உடம்புக்கு ரொம்பவே நல்லது.

நம்ம மொபைல் லாப்டாப்பில் வருகிற  எஸ்எம்எஸ் அல்லது  நோட்டிஃபிகேஷன் காலையில எழுந்தவுடனே பார்க்காமல் இருப்பது ரொம்பவே நல்லதுங்க. காலை நேரங்களில் நமது சிந்தனை மற்றும்  செயல் இது இரண்டுமே ஒரு முக்கியமான வேலைகளில் ஈடுபடுத்துவது நமக்கு ரொம்பவே பயனளிக்கும். இதுல நாம தினமும்   ஒரு மூன்று. இருபது நிமிஷம் கொள்கையை பலோவ்  பண்ணலாம். அது என்னனா முதல்  20 நிமிஷம்  உடற்பயிற்சிக்காகவும்  இரண்டாவது  20 நிமிஷம் தியான செய்யவும்  மூன்றாவது 20 நிமிஷம் ஏதாவது படிக்கலாம் எடுத்துக்காட்டாக காலையில் நியூஸ் பேப்பர் படிப்பது கூட ஒரு நல்ல பழக்கம்.

நாம  காலை சாப்பாடு சாப்பிடாமல் இருப்பது என்று ரொம்ப ரொம்ப தப்பான செயல். காலையில்  ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு நிலையாக இருக்காது அதைச் சரி செய்வதற்காகத் தான் காலை உணவு   எல்லா உயிர்களுக்கும் அவசியமான ஒன்று. காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு அவங்களோட இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு அதிகரித்து அவர்களுக்கு பிபி வரக்கூட வாய்ப்பு  இருக்கு .

இதற்காக தான் நம்ம முன்னோர்கள் ஒரு முக்கியமான உணவுப் பழமொழி சொல்லி இருக்காங்க அது என்னன்னா காலையில் ராஜாவைப் போல சாப்பிட வேண்டும் மதியம்  இளவரசனைப் போல சாப்பிடணும் இரவில் பிச்சைக்காரனைப் போல சாப்பிட வேண்டும்.  காலை நேரங்கள்ல பயிர்வகைகள், பிரட்டு  இதெல்லாம் எடுத்துக்கொள்வது உடம்புக்கு ரொம்ப நல்லது. பலபேரு டிராபிக்கில் சிக்கி கடுப்பாகி அதுக்கப்புறம் தான் ஆபிஸ்  போவாங்க  அவங்க இப்டி  செய்றதால அவங்களோட நேர்மறை ஆற்றலை  கம்ப்ளீட்டா  இழந்துருவாங்க.

 பொதுவாக காலைல எழுந்து  பத்து மணிக்கு முன்னால இயற்கையான சூழலை பார்க்கிறது, பறவைகளோட சத்தம் கேட்கிறது, கடலின் ஓசை ரசிக்கிறது அப்புறம் மந்திரங்கள் கேட்பது  இது எல்லாமே அருமையான பழக்கவழக்கங்கள். அதனாலதான் விடிய காலையிலே கண் விழிக்கிறது ரொம்பவே நல்ல விஷயம் . நம்ம நாளைக்கு என்ன சாப்பாடு சாப்பிடலாம் அப்படின்னு  முன்கூட்டியே நாம  யோசித்து முடிவு பண்ணி அது முந்தின நாள் நைட்டே ரெடி பன்னிவெச்சு  சாப்பிடுவது உடம்புக்கு ரொம்பவே கேடு தர விஷயம்.

ஆண்கள் சிலர் காலையில் எழுந்தவுடன் புகைப்பிடிப்பதை தங்களுடைய டெய்லி பழக்கமாய் வச்சிருக்காங்க பொதுவாக புகைப்பிடிப்பது  உடம்புக்கு கேடு விளைவிக்கக்கூடியது. காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பது நல்லது.  அதுக்கு முன்னாடி மற்ற  விஷயங்களை  தவிர்ப்பது ரொம்பவே நல்லது. உங்களுடைய கருத்துக்களையும் பதிவு பண்ணுங்க மேலும் சப்ஸ்கிரைப் பண்ணுங்க.

Comments

Popular posts from this blog

அழகர் மலை பதினெட்டம்பபடி கருப்பண்ணசாமி கோவில் வரலாறு