சூரிய ஒளியால் ஏற்படும் நன்மைகள் !!!!!


நமது  முன்னோர்கள் சூரியனின் சக்தியை  கொண்டு நம் உடலின் பல வியாதிகளை தீர்ப்பதற்கான வழியை  தெரிந்து வைத்திருந்தார்கள்.  ஆனால் இன்றைய சூழ்நிலையில் பல சர்ம பூச்சி விளம்பரங்களில் சூரிய ஒளியால் ஏற்படும் தீய விளைவுகளை மட்டுமே பெரிதாக்கி கட்டுகிறார்கள்.  ஆனால் சூரிய ஒளியில் மனித உடலுக்கு பல நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது தான் உண்மை. இந்த பதிவில்  நீங்கள் பார்க்கப்போவது சூரிய ஒளி நம்மீது படுவதால் உண்டாகும் நன்மைகள் பற்றியும், எவ்வளவு நேரம் இருக்க வேண்டும் எந்த நேரத்தில் சூரிய ஒளி பெற்றால் அதன் நன்மைகளை பெறமுடியும் என்பது பற்றி தான் பார்க்க போகிறோம்.  தவறாமல் பாருங்கள் தொடர்ந்து பல பயனுள்ள தகவல்களை பெற நமது  வலைப்பக்கத்தை  சப்ஸ்கிரைப்   இதுவரை செய்யாதவர்கள் இப்போது சப்ஸ்கிரைப் பண்ணுங்க.

குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் விட்டமின் டி தேவை பெரும்பாலும் சூரிய ஒளியால் மட்டுமே கிடைக்கிறது.  உடலிலுள்ள   எலும்புகள் பலமடைய இந்த வைட்டமின் D உதவுகிறது. விட்டமின் D ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய நோய் வராமல் தடுகிறது. மேலும் நீரிழிவு நோய் தடுப்பில்  பெரும்பங்கு வகிக்கிறது. சூரிய ஒளியின் மூலம் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம் என்று சில ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. நம் நாட்டில் பத்தில் ஏழு பேருக்கு விட்டமின்   D3 பற்றாக்குறை உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.  மேலும் இந்த ஆய்வில் இந்த பற்றாக்குறை ஏற்பட்டு ஒருவருக்கு கை கால் குடைச்சல், உடல் சோர்வு, எலும்பு வலி, மூட்டு வலி என்று சாதாரண தொல்லைகளில்  தொடங்கி ரிக்கட்ஸ் ,  எலும்பு வலுவிழப்பு நோய், எலும்பு முறிவு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, புற்றுநோய் கருத்தரிப்பில் பாதிப்பு என ஆபத்தான நோய்கள் ஏற்படலாம் என எச்சரித்துள்ளது.

பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தை பேணிக் காக்கும் வகையில் தினமும் காலையில் சூரிய குளியல் எடுப்பது பரிந்துரைக்கப்படுகிறது. முக்கியமாக சூரிய ஒளி உடலில் வெள்ளை ரத்த அணுக்கள்  உருவாக  காரணமாகிறது .

 இந்த  வெள்ளை இரத்த அணுக்கள்  உடலில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை அளிக்கின்றன. வெள்ளை அணுக்கள் உடலில் உள்ள நச்சுத்தன்மை எதிர்த்துப் போராடும் மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சிவப்பு இரத்த அணுக்களின் ஆக்சிடென்ட் கொண்டு செல்லும் திறனையும் சூரிய ஒளி அதிகரிக்கிறது. சூரிய ஒளி உடலில் செரட்டோனின் உற்பத்தியை  அதிகரிக்கிறது. இந்த செரட்டோனின் என்பது உடலில் மகிழ்ச்சி உண்டாகும் ஒருவகை சுரப்பியாகும் .

மெலட்டோனின் என்ற ஹார்மோன் தான் நம்மை இரவில் தூங்க வைக்க உதவுகிறது. சூரிய ஒளி எந்த அளவு நம் மீது படுகிறதோ  அதை பொருத்து இரவு நேரத்தில் இந்த  ஹார்மோன்   சுரத்தல்  தொடங்கிவிடும். அதைப் போன்று சொரியாஸிஸ்,  எக்ஸீமா பூஞ்சை தொற்று, கட்டிகள் போன்றவற்றிலிருந்து சூரிய ஒளி நமது தோலை பாதுகாக்கிறது. ஆயுர்வேத சூரிய குளியலில் பாதிப்பு ஏற்பட்ட உடல் பாகம் பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் வரை சூரிய ஒளி படுமாறு நிற்க செய்வார்கள் சூரிய ஒளியின் தாக்கத்தால் உடல் பாகம் சூடானதும் மறுபடி நிழலுக்கு வந்து பாதிக்கப்பட்ட இடங்களை தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து இந்த சிகிச்சையை தொடர்ந்து காலை வெயிலில்  செய்வதால் நல்ல பலன் ஏற்படுகிறது என்றும் தெரிவிக்கின்றனர்.

 பொதுவாக காலை 7 மணி முதல் 9 மணி வரை சூரிய ஒளியை  நாம் எடுத்துக்கொள்ளலாம் இன்னும் சொல்லப்போனால் சூரியன் உதித்து அதிலிருந்து இரண்டு மணி நேரம் சென்றவுடன் அதன் கதிர்களின் தாக்கம் குறைவாக இருக்கும் அந்த நேரம் நாம் சூரிய  ஒளியை  அனுபவிக்க சிறந்த நேரம். வெண்ணிற சருமம் கொண்டவர்கள் தினமும் சுமார் 20 நிமிடம் நேரடி வெயிலில்  இருந்தால் போதும் கருப்பு நிற சருமம் கொண்டவர்கள் 40 நிமிடம் நேரடி வெயிலில் இருக்க வேண்டும்.

 கடுமையான கோடையில் 15 நிமிடம் வெயிலில் இருப்பதும் குளிர்காலத்தில் குறைந்தது ஒரு மணி நேரம் நம் சருமத்தில் வெயில்  பட வேண்டியதும் அவசியம். ஒரே இடத்தில் நின்று கொண்டிருப்பது வேண்டியதில்லை வாக்கிங் செல்லலாம். எனவே அனைவருக்கும் ஒரு பைசா கூட செலவு இல்லாமல் இலவசமாக சூரிய கிடைக்கும் பொழுது அதைக் கொண்டு ஆரோக்கியமாக வாழ்வது விட்டுவிட்டு ஏன் இதை தவற விட வேண்டும் இனி நீங்களும் சூரியக்குளியல் தொடங்குங்கள்.  

Comments

Popular posts from this blog

அழகர் மலை பதினெட்டம்பபடி கருப்பண்ணசாமி கோவில் வரலாறு

நாம் தினமும் உபயோகப்படுத்தும் சிம் கார்டை பற்றி தெரிந்து கொள்வோம் ???.

நடன நடிப்பு நாயகன் பிரபு தேவா !!!!!