யூடூப் என்னும் நமது சேனல் !!!!!

 யூடூப் என்னும் நமது சேனல் !!!!!







நான் சிறுவனாக இருந்த போது உனக்கு எதாவது தெரியவில்லையா அல்லது எதாவது கற்று கொள்ள வேண்டுமா உடனே யூடூப் சென்று பார் என்று கூறுவார் எனது சித்தப்பா . நான் கூறுவது 2005 ஆம் ஆண்டு அன்று பெரும்பாலான வீடுகளில் தொலைக்காட்சி  கூட இல்லாத காலம் . நான்  எங்கு சென்று  யூடூப்பில் வீடியோ பார்ப்பது . காலம் செல்ல செல்ல இன்டர்நெட்  நமது கைக்குள் வரத் தொடங்கியது . யூடூப்பின் அதிவேக  வளர்ச்சியும் மக்களிடம் செல்ல தொடங்கியது . யூடூப் பயன்படுத்தும் பெரும்பாலனோர் கைபேசி மூலமாக தான் யூடூப் பயன்படுத்துகிறார்கள் . யூடூப்பின் வளர்ச்சிக்கு கைபேசியும் ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது . 

முதலில்  பொழுது போக்குக்காக  யூடூப் பார்க்க தொடங்கிய பலரும் இன்று அதனை  ஒரு முழு நேர தொழிலாக கருதி  செய்வதனை பார்க்க முடிகின்றது . எடுத்து காட்டாக கூற வேண்டும் என்றால்  பிரிந்து சென்ற தனது காதலியை பார்க்க வைக்க வேண்டும் என்று விளையாட்டாக வீடியோ  வெளியிட்டு அதன் மூலமாக பிரபலமான மதன் கௌரி அவரை நாம் நன்கு அறிவோம் . தனது ஐடி வேலையே  விட்டு யூடுப்பை சொந்த  தொழிலாக செய்கிறார். 

சினிமா பார்ப்பதையே குற்றமாக  கருதிய காலத்தில்  சினிமா கதைகள் மூலம்  அனைத்து  விதமான  தரப்பினரையும்  மகிழ்ச்சி அடைய   செய்திருக்கிறார்  MR தமிழன் யூடூப் சேனல்.  இன்னும் பலர் இதன்  மூலம் பிரபலமாகியும் சினிமாவிலும் நடித்து புகழ்  பெற்றும் வருகின்றனர் . திறமையும் விடாமுயட்சியும் இருந்தால் சிபாரிசு தேவையில்லை என்பதட்கு  யூடூப் ஒரு சிறந்த உதாரணம் . இன்னும் பலபேர் சிறிய  அளவில் இருந்து பெரிய நிலைமைக்கு முன்னேறியுள்ளனர் . இந்த  கட்டுரையை முன்னேற  துடிக்கும் இளைஞர்களுக்கு  சமர்ப்பிக்கிறோம் .

Comments

Popular posts from this blog

அழகர் மலை பதினெட்டம்பபடி கருப்பண்ணசாமி கோவில் வரலாறு