மக்களின் அதிபர் பிடெல் காஸ்ட்ரோ !!!!.
மக்களின் அதிபர் பிடெல் காஸ்ட்ரோ !!!!.
உலகத்தையே வியப்பில் ஆழ்த்திய ஒரு மனிதன். அதாவது சர்க்கரைக் கிண்ணம் அப்படின்னு ஒரு நாட்டுக்கு பேரு அந்த நாட்டுக்கு அந்த பேரு ஏன் வந்தது அங்கு தான் அதிகமாக கரும்பு விளைந்தது தேன் கிண்ணம் சொல்ற மாதிரி சர்க்கரை கிண்ணம் நாடு கியூபா. உலக வல்லரசான அமெரிக்காவைப் பிடரியை பிடித்து ஆட்டிய பெருமை அந்த கியூபாவுக்கு உண்டு . 1926 ஆம் ஆண்டு அங்கு ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார் பிடல் காஸ்ட்ரோ .
அவருடைய தந்தையார் ஒரு பெரிய பண்ணையார், அவருடைய தாயார் நல்ல வளர்ப்பின் காரணமாக இவரும் கடும் உழைப்பாளியாக மாறி இவருடைய உழைப்பின் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களை எல்லாம் உருவாக்கி அங்கு உள்ளவர்களுக்கெல்லாம் வேலை கொடுத்து ஒரு அற்புதமான விவசாயியாக திகழ்ந்தார். மூன்று முறைகள் மூலமாக அந்த நாட்டை ஆண்டார். கம்யூனிசம் என்கிற அந்த பொதுவுடைமை சித்தாந்தத்தை இவர் கேள்விப்பட்டதில்லை. மேல்படிப்புக்கு செல்லும்போது கம்யூனிசம் பற்றி கேள்விப்பட்டார்.
லெனின் பற்றியும் ரஷ்ய புரட்சியைப் பற்றியும் தெரிந்து கொண்ட பிறகு நாம் அடிமைப்பட்டு கிடக்கிறோம் என்பதை அவர் புரிந்து கொண்டார். எப்படி என்று சொன்னால் அந்த நாட்டை ஆண்ட சர்வாதிகாரி தனது விருப்பத்தின் காரணமாக மக்கள் வறுமையிலும் நோயிலும் வைத்திருந்தபோது இதற்கு மாற்று வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு அதற்காக போராட்டத்தில் இறங்கினார். அந்தப் போராட்டத்தில் இறங்கிய போது அவருடைய போராட்ட முறை சாதாரணமான முறையில் தான் நடத்தப்பட்டது.
ஆனால் பிறகு ஒரு முறையான திட்டம் வகுக்கப்பட்டது. அந்த கொரில்லா போர் முறையில் வந்து குழப்பம் காரணமாக இவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டுள்ள வழக்கில் இவர் வாதாடிய உரை இன்றைக்கும் கூட அங்கு பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது. பிறகு போராட்டக்காரர்கள் ஒன்று சேர்ந்து மிகக் கடுமையாக போராடி அந்த சர்வாதிகாரியை நாட்டை விட்டு விரட்டி தானே பொறுப்பேற்றுக் கொள்கிறார். அப்படி பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு 1956 இல் இருந்து 1976 வரைக்கும் அந்த நாட்டு பிரதமாக இருக்கிறார். பிறகு
அதற்கடுத்தபடியாக ஜனாதிபதியாக இருந்தார். தன்னுடைய கடைசிக் காலம் வரையில் அவருடைய பெரும் புகழுக்கு காரணமாக இருந்தவர் அவர்தான். இன்னைக்கு ஒரு ஆச்சரியம் என்னவென்றால் எந்த குழந்தையாய் இருந்தாலும் அங்கு அந்த குழந்தைக்கு படிப்பு இலவசம் அந்த குழந்தைக்கு மருத்துவம் இலவசம் அந்த குழந்தைக்கு பயணம் இலவசம் அதாவது மாணவர்களுக்கு உலகில் எங்குமே இல்லாத ஒரு அற்புதத்தை நிகழ்த்திக் காட்டிய பெருமை இந்த பிடல் காஸ்ட்ரோவுக்கு உண்டு .
இவருடைய அந்தப் பெருமையின் காரணமாகத்தான் அவர் 2016இல் மறைந்த பிறகு அவருடைய சகோதரர் அந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார். அவர் செய்த சீர்திருத்தங்கள் அந்த சீர்திருத்தத்தின் காரணமாக உலகையே வியக்க வைக்கக்கூடிய அளவிற்கு அந்த நாட்டை முன்னேற்றி காட்டிய பெருமை அவரிடத்தில் இருந்தது. சாதாரண மனிதனாக தோன்றுகிறார். நம் பிறப்பு வேண்டுமானால் சாதாரணமாக இருக்கலாம் ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் என்று மேதகு அப்துல் கலாம் சொன்னது யாருக்கு பொருந்தும் என்று சொன்னால் நிச்சயமாக பிடல் காஸ்ட்ரோ அவர்களுக்கு பொருந்துகிறது.
Comments
Post a Comment