E-Commerce வரமா ? சாபமா ?
E-Commerce வரமா ? சாபமா ? இன்று அனைவருக்கும் காற்று எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு இன்டர்நெட் என்பது முக்கியமான ஒன்றாக அமைந்துவிட்டது . அம்மா அப்பா கூட இல்லாமல் இருந்து விடுவார்கள் ஆனால் இன்டர்நெட் இல்லாமல் இருப்பார்களா என்பது சநதேகம் தான் . அப்படிப்பட்ட இன்டர்நெட் மூலம் பல துறைகள் பிரமாண்ட வளர்ச்சி அடைந்துள்ளது . அதில் ஒன்று தான் E-Commerce என்னும் மின்வணிகம் . இன்று கைபேசி பயன்படுத்த தெரிந்த அனைவரின் கைபேசியிலும் இந்த E-Commerce செயலிகள் நிச்சயமாக இருக்கும். இந்த மின்வணிக தளங்களை மக்கள் தேடி செல்ல பார்க்கப்படும் இரண்டு காரணங்கள். ஒன்று வீட்டிலிருந்தே ஷாப்பிங் செய்யலாம் இரண்டாவது குறைந்த விலையில் கிடைப்பதாக மக்கள் கருதுகின்றனர் . நமது கடைத்தெருக்களில் கிடைக்காத பல பொருட்கள் கூட ஆன்லைனில் கிடைப்பதாக கூறப்படுகிறது . பண்டிகை நாட்களில் இந்த தளங்களில் கொடுக்கப்படும் சிறப்பு தள்ளுபடி இன்னும் மக்களிடம் வரவேட்பை பெற்றுள்ளது. இப்படிப்பட்ட ஆன்லைன் ஷாப்பிங்கில் இன்னும் சிலபல குறைகள் இருக்க தான் செய்கிறது . நாம் ஆர்டர் செய்தால் நான்கு முதல் ஐந்து நாட்கள