அழகர் மலை பதினெட்டம்பபடி கருப்பண்ணசாமி கோவில் வரலாறு
அழகர் மலை பதினெட்டம்படி கருப்பண்ணசாமி கோவில் வரலாறு !!!!. 108 திவ்ய ஸ்தலங்களில் ஒன்று சிலப்பதிகாரத்தில் அழகர் கோவிலைப் பற்றி திருமாலிருஞ்சோலை பற்றி நமக்கு செய்திகள் வருகின்றன. மாடல மறையோன் சொல்லுகிறபோது மதுரை உடைய வழியை சொல்லுகிறபோது சிலப்பதிகாரத்தில் அந்த அழகர் மலையை பற்றி சொல்கிறார். பரிபாடல் பற்றி சொல்கிறது எத்தனையோ அழகரந்தாதி, அழகர் கலம்பகம், கிள்ளைவிடு தூது ஆகிய நூல்கள் கூறுகின்றது . இந்த பெருமை மிகுந்த திருமாலிருஞ்சோலை 108 திவ்ய ஸ்தலங்களில் ஒன்று என்பதனை ஆழ்வார்கள் பாடி இருக்கிறார்கள் குறிப்பாக பெரியாழ்வாரும், ஆண்டாளும் தன்னுடைய நிறைவு காலத்தினை இங்கு தான் கழித்தார்கள் . நாச்சியார் திருமொழி எல்லாம் இந்த கோவிலை பற்றி கூறுகிறது.கோவிலுக்கு வெளியே சன்னதி ஒன்று இருக்கிறது. அங்கு உருவமில்லை பெரிய கதவு அந்த கதவை திறந்தாள் 18 படிகள் இருக்கும். ஒரு ஆள் உயரத்துக்கு மேல் ஒரு அருவாள் இருக்கும். பெரிய பாதுகைகள் இருக்கும் அந்தக் கடவுளுக்குத்தான் மாலை போட்டு இந்த பதினெட்டாம்படி கருப்பு என கும்பிடுகிறார்கள். இந்த பதினெட்டாம்படி கருப்பு யார் அவர் ஏன் இங்கு வந்து இருக்கிறார் இதுக்கான