Posts

Showing posts from April, 2022

நடன நடிப்பு நாயகன் பிரபு தேவா !!!!!

Image
  பிரபுதேவா   (   ஏப்ரல் 3 ,   1973 ,   சென்னை ) இந்தியத் திரைப்பட நடிகர், நடன அமைப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் நடன ஆசிரியர்   சுந்தரத்தின்   மகனாவார். தாயார் பெயர் மகாதேவம்மா . ராஜு சுந்திரம் மற்றும் நாகேந்திர பிரசாந்த் இரு சகோதரன் உண்டு . இவரின்  வேகமாக நடனமாடும் திறமைக்காக இவர் இந்தியாவின்   மைக்கல் ஜாக்சன்   என்று பிரபலமாக அறியப்படுகின்றார். இவரது முதலாவது நடனம் வெற்றிவிழாத் திரைப்படத்திற்கானதாகும். இவர் இன்றுவரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடனமாடியுள்ளார்.   மின்சார கனவு   திரைப்படத்தில் இடம்பெற்ற   வெண்ணிலவே வெண்ணிலவே   பாடலில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய பிரபுதேவா   சிறந்த நடன ஆசிரியருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதைப்   பெற்றுள்ளார். நடன ஆசிரியராக பல திரைப்படங்களில் பங்காற்றிய இவர் 1989 ஆவது ஆண்டில் வெளியான  இந்து  திரைப்படத்தில் நடிகை  ரோஜாவுடன்  இணைந்து நடித்தார். இதுவே இவர் முழுநேர கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படமாகும். நடிப்பைத் தொடர்ந்து இயக்குனராகவும் அவதாரம் எடுத்த இவர் போக்கிரி, வில்லு உட்பட பல தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களை

ரமலான் பண்டிகையின் நோக்கம் மற்றும் பலன்கள் !!!!!

Image
  இம்மாதம் ரம்ஜான், ரமலான் எனவும் அழைக்கப்படுகிறது.   இம்மாதத்தில் உலகெங்கிலும் உள்ள   இசுலாமியர்கள்   நோன்பை அனுசரிக்கிறார்கள். இசுலாமிய நம்பிக்கையின்படி  முகம்மது நபிக்கு   முதன் முதலில் குரானை வெளிப்படுத்திய மாதத்தை நினைவுகூறும் விதமாக இந்த நோன்பை அனுபவிக்கிறார்கள்.   ஆண்டுக்கொரு முறை அனுசரிக்கப்படும் இந்த நோன்பு   இசுலாத்தின் ஐந்து தூண்களுள்   ஒன்றாகக் கருதப்படுகிறது.  இந்த மாதமானது நிலவின் பிறைக்காட்சியின்படியும்,   ஹதீஸ்களில்   தொகுக்கப்பட்டுள்ள பல்வேறு வாழ்க்கை வரலாறுகளின்படியும் 29–30 நாட்கள் இருக்கலாம்.  ரமலான் என்ற அராபிய வார்த்தையானது ரமிதா அல்லது அர்-ரமத் (சுடும் வெப்பம் அல்லது உலர்தன்மை என்ற பொருளைத் தரக்கூடியது) என்பதிலிருந்து வருவிக்கப்பட்டுள்ளது. நோன்பானது வயது வந்த இசுலாமியர்களுக்கு கட்டாயமான கடப்பாடு ஆகும். நோய்வாய்ப்பட்டவர்கள், பயணத்தில் உள்ளோர், வயது முதிர்ந்தோர், கர்ப்பிணிப் பெண்கள், பாலுாட்டும் தாய்மார்கள், நீரிழிவு நோயாளிகள், கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மாதவிடாய் காலத்தில் உள்ளோர் ஆகியோர் மட்டுமே நோன்பிருப்பதிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்கள் ஆவர்.  மக்கா